போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
தன்னைத்தானே சுட்டுக் கொண்ட பொலிஸ் அதிகாரி!
அம்பாறை தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (01) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பாறை தலைமையக பொலிஸாரின் பொலிஸ் இன்ஸ்பெக்டர்களுக்குரிய வீட்டுத் தொகுதிக்கு முன்பாகவே சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த பொலிஸ் இன்ஸ்பெக்டரின் மூளை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ராஜித ஸ்ரீ தமிந்தவின் பணிப்புரையின் பேரில் சம்பவம் தொடர்பில் அம்பாறை பொலிஸார் விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.