போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
தமிழர் பகுதியில் கொள்ளையனாக மாறிய சிறுவன்!
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் ஐந்து கடைகள் மற்றும் கோவிலையும் உடைத்து திருடிய குற்றச்சாட்டில் இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் 14 வயதுச் சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
புதுக்குடியிருப்பு சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு கடை, வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள ஒரு கடை, மந்துவில்லில் ஒரு கடை, காமன்ஸ் அருகே ஒரு கடை, செம்மண்குன்றில் ஒரு கடை என ஐந்து கடைகளும் கொள்லையிடப்பட்டிருந்தன.
அதோடு , புதுக்குடியிருப்பு நாகதம்பிரான் ஆலயத்தில் உண்டியலும் உடைக்கப்பட்டு பணமும் பொருட்களும் திருடப்பட்டுள்ளது.
கொள்லைச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையிலான பொலிஸார் குறித்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
மேலும் கைதான சந்தேக நபர்களிடம் இருந்து திருடப்பட்ட 46,230 ரூபா பணமும், திருடப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.