தமிழீழ விடுதலைப் புலிகளின் வெடிபொருட்கள், சீருடைகள், கொடிகளுடன் இருவர் கைது
முல்லைத் தீவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெடிபொருட்கள், சீருடைகள், கொடிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு வீதியில் பேராறு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாகனம் ஒன்றை போலீசார் மறித்தனர்.
அப்போது வாகனத்தில் இருந்து ஒருநபர் தப்பி ஓடினார். இதையடுத்து அந்த வாகனத்தை போலீசார் சோதனை நடத்தினர்.
அதில், விடுதலைப் புலிகள் பயன்படுத்திய 15 கிலோ பவான் ரக வெடிகுண்டு, டெட்டனேட்டர்கள், ஒயர்லெஸ் கருவிகள், கையெறிகுண்டுகள், விடுதலைப் புலிகளின் கொடிகள், சீருடைகள் கைப்பற்றப்பட்டன. அந்த வாகனத்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.