நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
திருக்கேதீச்சர ஆலயத்தின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விமான சேவைகளை நடத்த எற்பாடுகள்
இலங்கை மக்களை டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன் போன்றோர் எதுவும் அறியாத முட்டாள்கள் என்றா இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்?
யாழ் – தமிழக விமான சேவை தங்கள் கோரிக்கையின் பிரகாரம்தான் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதென்றும் தங்கள் அழைப்பின் பேரில் அமைச்சர் நிமால் சிறீபால டீ சில்வா யாழ் வந்து உடனடியாக விமான சேவைகளுக்கு அனுமதி கொடுத்தார் தங்கள் முயற்சிக்கு வெற்றியென இந்த இருவரும் உருட்டும் உருட்டுக்கள்தான் இந்த இரண்டுநாளாக பேஸ்புக் எங்கும் பரவிக்கிடக்கிறது.
அங்கஜன் அடிபொடிகளும் தோழர் டக்லஸ் விசுவாசிகளும் விமான சேவை யாரின் முயற்சியால் தொடங்கப்பட்டது என்பதற்கு கடந்த மே மாதம் 3 ஆம் திகதி இலங்கையில் வைத்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் வழங்கிய பேட்டியை பார்க்கவும்,
திருக்கேதீச்சர ஆலயத்தின் பணிகளை பார்வையிட்ட அண்ணாமலை அவர்கள் அதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் திருக்கேதீச்சர ஆலயத்தின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விமான சேவைகளை நடத்த எற்பாடுகள் செய்வோம் என்றும் கப்பல் போக்குவரத்தை மேற்கொள்வோம் என்றும் பகிரங்கமாகவே தெரிவித்தார்.
அவரின் அறிவிப்பின் தொடர்ச்சியாகத்தான் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் கோரிக்கையின் பிரகாரம் துரிதமாக விமான நிலையப்பணிகளை ஆரம்பித்து திருக்கேதீச்சர ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கான விமான சேவையினை குறித்த திகதியில் ஆரம்பிப்பது தொடர்பாக ஆராயவே அமைச்சர் யாழ்ப்பாணம் வந்தார்.
அப்படி வந்தவரை நாம் தான் அழைத்து வந்தோம் நாம் தான் கோரிக்கை விடுத்தோம் என்று இருவீட்டார் அழைப்பாக இருவரும் போட்டி போட்டு உரிமை கோரியதை அண்ணாமலையின் இந்த பழைய காணொளி சல்லிசல்லியாக உடைத்துவிட்டது.
இது நவீன காலம் உங்கள் உருட்டுக்களை வைத்து மக்களை ஏமாற்றலாமென எண்ணிக்கொண்டிருந்தால் உங்களைப்போன்ற காமடியர்கள் வேறு யாரும் இருக்கமாட்டார்கள்.
உண்மையில் யாழ் – தமிழக விமான சேவையை உடனடியாக ஆரம்பிக்க காரணமாக இருந்தது அண்ணாமலை அவர்களின் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் மோடியின் அரசியல் பலமுமே
தமிழ்நாட்டில் உள்ளோர் இன்னும் தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளின் அடிமைகளாக இருக்காமல் ஆளுமை உள்ள அண்ணாமலை போன்றோருடன் கைகோர்க்க முன் வாருங்கள் அது தமிழகத்தோடு சேர்ந்து ஈழத்தையும் தலை நிமிர வைக்கும் என முகநூலில் சுப்ரமணிய பிரபா என்ற நபர் பதிவிட்டுள்ளார்.