நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
திருடனுக்கு வந்த சோதனை!
யாழில் நபர் ஒருவரின் சைக்கிளை திருடி பிரபல விற்பனை செய்வதற்கான இணையதளத்தை பயன்படுத்தி சைக்கிளின் உரிமையாரிடமே விற்பனை செய்ய முயன்ற சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது நேற்று யாழ்ப்பாணம் – மூளாய் வேரம் அக்கினி வைரவர் ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள கோயிலில் பொன்னாலை இளைஞன் ஒருவரின் சைக்கிள் திருடுபோன நிலையில் அவரின் சைக்கிள் பிரபல விற்பனை இணையதளம் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பொலிஸாரிடம் சைக்கிள் திருடுப்போனது தொடர்பில் வழக்குப்பதிவு செய்ததையடுத்து பொலிஸாரின் உதவியுடன் விளம்பரப்படுத்தப்பட்ட தொலைப்பேசி எண்ணிடம் தொடர்பு கொண்டுள்ளார்.
மேலும் குறித்த சைக்கிளை நான் வாங்கிக் கொள்கிறேன் சைக்கிளை எடுத்து கொண்டு ஒரு இடத்திற்கு வரவழைத்துள்ளார்.
இதனை நம்பி சந்தேக நபர் திருடிய சைக்கிளை உரிமையாளரிடமே விற்பளை செய்ய வந்த வேளையில் பொலிஸாரால் மடக்கிப்பிடிக்கப்பட்டார்.
இதனையடுத்து பொலிஸார் சைக்கிளை உரிமையாளரடம் ஒப்படைத்து விட்டு சந்தேக நபரை வட்டுக்கோடடை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுச்சென்றுள்ளனர்.