திருவிழாவிற்காக கூடியிருந்த பொதுமக்களின் மீது மோதிய டிப்பர்!
யாழில் திருவிழாவிற்காக கூடியிருந்த பொதுமக்களின் மீது டிப்பர் லொரி மோதியதில் 07 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது நேற்றையதினம் நெல்லியடி – மாலுசந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மணல் ஏற்றி வந்த டிப்பரை பொலிஸார் வழிமறித்தபோது டிப்பரை தொடர்ந்து இயக்கிய சாரதி அங்கு கூடியிருந்த பொதுமக்களை மோதிவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
இதனால் அப்பொதுமக்களில் 07 பேர் படுகாயமடைந்து யாழ். போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.