இலங்கையர்களுக்கு வரும் அனாமதேய அழைப்புகள் ; பொலிஸார் எச்சரிக்கை
துமிந்த சில்வாவை உடனடியாக கைது செய்யுமாறு சட்டமா அதிபர் காவல்துறை மா அதிபருக்கு பணிப்புரை

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய துமிந்த சில்வாவை உடனடியாக கைது செய்யுமாறு சட்டமா அதிபர் காவல்துறை மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சில்வாவுக்கு அரச தலைவர் மன்னிப்பு வழங்கியுள்ள நிலையில், அரச தலைவரின் தீர்மானத்தை எதிர்த்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்றம், விசாரணை முடியும் வரை சில்வாவுக்கு வழங்கப்பட்ட அரச தலைவரின் மன்னிப்பை இடைநிறுத்த தீர்மானித்துள்ளது
அதன்படி, முன்னாள் எம்.பி.யை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.