ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ள 4 தமிழ்மொழி மூல பாடசாலைகள்

ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தும் வேலைத்திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் இருந்து 4 தமிழ்மொழி மூல பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.
இதற்கமைவாக கம்பஹா கல்வி வலயத்தில் இருந்து அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியும், மினுவாங்கொடை கல்வி வலயத்தில் இருந்து கல் எளிய அலிகார் மகா வித்தியாலயமும், நீர்கொழும்பு கல்வி வலயத்தில் இருந்து அல் ஹிலால் மத்திய கல்லூரியும், களனி கல்வி வலயத்தில் இருந்து வத்தளை, மாபோல அல் அஷ்ரப் மகா வித்தியாலயமும் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.