தோழியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு: 12ஆம் வகுப்பு மாணவி பள்ளி வளாகத்தில் தற்கொலை
தேனீர் அருந்த சென்றவருக்கு ஏற்பட்ட கதி!
தென்னிலங்கையில் தேனீர் அருந்த சென்ற ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குளியாபிட்டிய வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தேநீர் அருந்திவிட்டு அதன் முன் காத்திருந்த நபர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவர் குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் குளியாபிட்டிய தண்டகமுவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவித்த பொலிஸார் கொலைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும் தெரிவித்தனர்.