தேவாலயத்தில் திடிரென தாக்கிய மின்னல்!
யாழில் ஞாயிறு ஆராதனை நடந்து கொண்டிருந்த வேளையில் தேவாலயத்தை மின்னல் தாக்கியுள்ளது.
இச்சம்பவமானது இன்று புனித ஆரோக்கியநாதர் தேவாலயத்தில் காலை 07 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை முதல் யாழில் பல இடங்களில் மழை வீழ்ச்சி பதிவானபோது குறித்த தேவாலயத்தில் ஆராதனை நடந்து கொண்டிருந்தது.
இதன்போது அத்தேவாலயத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளது.
இதனால் மேற்கூரைப்பகுதிகளும், மின் இணைப்புக்களும் சேதமடைந்தன. எனினும், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.