போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
நபர் ஒருவர் தனது மனைவியை தாக்கி கொலை
இரத்தினபுரி கீழ் ஹகமுவ பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மனைவியை தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இன்றைய தினம் (10-06-2022) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 47 வயதான பெண்ணொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இச் சம்பவத்தில் சந்தேக நபர் தமது 11 வயது மகனையும் கழுத்தை நெரித்து கொல்ல முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
குடும்பத்தகராறு காரணமாக சந்தேகநபரான கணவர் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பெண்ணைக் கொன்ற பின்னர், சந்தேக நபர் குழந்தையை கழுத்தை நெரித்து வீட்டுக்குள் கொலை செய்ய முயன்றுள்ளார்.
அயலவர்கள் சந்தேக நபரை இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்ததுடன், காயமடைந்த குழந்தையை இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.