இலங்கையர்களுக்கு வரும் அனாமதேய அழைப்புகள் ; பொலிஸார் எச்சரிக்கை
நாட்டில் அதிகரிப்பு பணவீக்கம்!

நாட்டில் ஜூலை மாதத்தில் பணவீக்கம் 66.7% ஆக அதிகரித்துள்ளது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நேற்று இது தொடர்பான தரவுகளை வெளியிட்டது. ஜூன் மாதத்தில் பணவீக்க வீதம் 58.9% ஆக இருந்தது.
போக்குவரத்துப் பிரிவில் பணவீக்கம்
போக்குவரத்துப் பிரிவில் அதிக பணவீக்க வீதம் காட்டப்பட்டுள்ளது, அந்த வகையில் பணவீக்க வீதம், ஜூன் மாதத்தில் 96.8% ஆக இருந்தது, கடந்த மாதம் 117.1% ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கடந்த மாதம் உணவு வகைகளின் பணவீக்கம் 82.5% ஆக காணப்பட்டது.