நாட்டில் இன்று முதல் எரிபொருள் நெருக்கடி மேலும் மோசமடையும்

நாட்டில் இன்று முதல் எரிபொருள் நெருக்கடி மேலும் மோசமடையும் என ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் புள்ளிவிபரங்களின்படி இன்னும் நான்கு நாட்களுக்கு மட்டுமே நாட்டில் டீசல் கிடைக்கும் என அதன் அழைப்பாளர் ஆனந்த குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு பணம் செலுத்தப்படவில்லை. கப்பல்கள் நிறைய உள்ளன எனினும் பணம் செலுத்தப்படவில்லை.
இதனால் இன்று முதல் மக்கள் வரிசையில் நிற்க வேண்டும். வரிசையில் நின்றாலும் எரிபொருள் பெற முடியாத நிலை ஏற்படும் எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் மண்ணெண்ணை என்பதே இல்லாமல் போகும். மக்கள் கடுமையான மண்ணெண்ணை பற்றாக்குறையை எதிர்கொள்ளவுள்ளனர்.
இன்றுமுதல் ஒரு வரிசையல்ல 4 வரிசை ஏற்படும். எரிபொருட்கள் இறக்குமதி செய்யப்படவில்லை எனவும், இன்றுமுதல் பாரிய மக்கள் வரிசை காணப்படும், 95 வீதமான மக்கள் மண்ணெண்ணெய் தேவையை பூர்த்தி செய்யத் தவறினால் மண்ணெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என ஆனந்த பாலித எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.