நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய மரணங்கள்; பறக்கவிடப்பட்டுள்ள வெள்ளைக் கொடிகள்
அம்பாறையில் வெள்ள நீரில் அகப்பட்டு மரணமடைந்த மாணவர்களிற்காக ட்துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி நிந்தவூர் மாவடிப்பள்ளி சம்மாந்துறை பகுதிகளில் வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
மாணவர்களின் தவிர்க்க முடியாத பிரிவின் காரணமாக துக்கத்தினை வெளிப்படுத்தும் விதமாக வெள்ளைக் கொடி கட்டி பறக்கவிடப்பட்டுள்ளது.
அம்பாறை காரைதீவு – மாவடிப்பள்ளியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்கள் உயிரிழந்திருந்தனர்.
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் சம்மாந்துறை பகுதியை சேர்ந்த மாணவர்கள் தமது பிரதேசத்திற்கு செல்லும் வழியில் காரைதீவு,மாவடிப்பள்ளி பாலத்தடியில் வெள்ள அனர்த்தத்தின் அகப்பட்டு உயிரிழந்தமை நாடு உழுவதையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.