போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
நாட்டை வந்தடைந்த 3,950 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுடன் கூடிய கப்பல்
நாட்டிற்கு நேற்றைய தினம் 3,950 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுடன் கூடிய கப்பல் ஒன்று வந்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்று (30-05-2022) மாலை எரிவாயுவை தரையிறக்கும் பணி ஆரம்பமானதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று (31-05-2022) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நாள்தோறும் 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளது.
இவற்றில் 60 சதவீதமானவை அதாவது சுமார் 30 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்திற்கு விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.