நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
நாயை கோடரியால் வெட்டி விட்டு தலைமறைவு: பொலிஸார் வலைவீச்சு!
யாழில் நாயை இலு இளைஞர்கள் சேர்ந்து கேடாரியால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது இன்றையதினம் யாழ்ப்பாணம் – புங்குடுதீவு 9ம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் சுற்றித்திருந்த நாயை இரு இளைஞர்கள் விரட்டி பிடித்து முதலில் நான்கு காலை வெட்டியுள்ளனர்.
பின்னர் நாயின் முகத்தை கோடாரியால் தாக்கி சிதைத்துள்ளதோடு தகாத வார்த்தைகளால் திட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இந்தச்சம்பவத்தை செய்தவர்கள் குறித்த பகுதியில் உள்ள பாலகிஸ்ணன், பாலசுதர்சன் ஆகியோர் என விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் அந்த இரு இளைஞர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.