நாய்க்கு போதை மருந்து கொடுத்த திருடன்!
வீட்டினை காவல் காத்து வந்த நாய்க்கு போதை மருந்தினை கொடுத்துவிட்டு சைக்கிளை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது இன்றையதினம் தெஹிவளை/ கல்கிஸ்ஸ பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு சந்தேக நபர்கள் சைக்கிளை திருடிச்செல்லும் சி.சி.டிவி காட்சியினை வீட்டின் உரிமையாளர் தனது முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.
குறித்த வீட்டில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் முதலில் நாய்க்கு போதைப்பொருள் கொடுத்துள்ளனர்.
சிறிது நேரம் கேட் திறக்கப்படாத நிலையில் வெளியில் இருந்த சைக்கிளை திருடிச்சென்றுள்ளனர்.