நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
நீரில் மூழ்கிய கண்டி ரயில் நிலையம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகள்
கடும் மழையினால், கண்டி ரயில் நிலையம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியமைக்கு, சட்டவிரோத கட்டிட நிர்மாணங்கள் மற்றும் முறையற்ற வடிகால் அமைப்பே காரணம் என கூறப்படுகிறது.
ரயில் நிலையத்தை அண்மித்துள்ள முறையற்ற வடிகால் கட்டமைப்பு மற்றும் வடிகால்கள் என்பனவே , ரயில் நிலையம் நீரில் மூழ்க காரணம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கண்டி நகரில் நேற்றையதினம் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி ஒரே நேரத்தில் பெய்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
கடும் மழையை தொடர்ந்து போகம்பரவிற்கு பின்புறமாகவுள்ள மலை பகுதியிலிருந்து பெருமளவான வெள்ள நீர், ரயில் நிலையத்தை நோக்கி பெருக்கெடுத்திருந்ததாகவும் கூறப்படும் நிலையில், வெள்ள அனர்த்ததால் மக்கள் பெரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.