நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
பாடசாலை மாணவர்களுக்கு நபரொருவரால் நேர்ந்த கொடூர சம்பவம்!
காலியில் உள்ள பல பாடசாலை மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளது.
காலி பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளில் கல்வி கற்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள் குழுவொன்று, தமது பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் ஒருவர் தொடர்பில் சிஐடி புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், உனவடுன பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
வாட்ஸ்அப் மூலம் குழந்தைகளுடன் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவது தெரிய வந்தது.
இந்நிலையில், உனவடுன பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
வாட்ஸ்அப் மூலம் குழந்தைகளுடன் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவது தெரிய வந்தது.
இலங்கையில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள் பல்வேறு இடங்களில் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர், பிரபல ஆலயம் ஒன்றை நடத்தி வரும் பூசாரி என்ற போர்வையில் குழந்தைகளை ஈர்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஓகஸ்ட் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.