பாதுகாப்பு படையினர் அதிகப்படியான சக்தியை பயன்படுத்தினால் விசாரணை நடத்துமாறு ஹனா சிங்கர் வேண்டுகோள்
இலங்கையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக பல மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்களின் மனநிலையை பாதுகாப்பு படையினர் புரிந்துகொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் இன்று(19) அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு படையினர் அதிகப்படியான சக்தியை பயன்படுத்தினால் விசாரணை நடத்துமாறு அதிகாரிகளை தான் கேட்டுக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு – விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவம் மற்றும் பொது மக்களிடையே நேற்று(18) இடம்பெற்ற மோதலையடுத்து ஹனா சிங்கர் மேற்படிக் கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.