பெட்ரோல் இன்மையால் தனது ஆதங்கத்தை வெளியிட்ட ஆசிரியை
இலங்கை அரசாங்கம் அசிரியர்களுக்கு எந்த அடிப்படையிலும் முன்னுரிமை வழங்குவதில்லை என கிளிநொச்சியில் நடு வீதியில் அரசு ஆசிரியை ஒருவர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பில் தெரியவருவது,
இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்நிலையில் ஆசிரியை ஒருவர் கடந்த மூன்று நாட்களாக பெற்றோலுகாக எரிபொருள் நிலையத்திற்கு வந்துபோவதாக பெற்றோல் இல்லாததால் பாடசாலைக்கு செல்ல முடியவில்லை என தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.