பெண் கொராணா தொற்றாளர் பலி!
யழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொராணா தொற்றானர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 76 வயதான பெண் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன் கொராணா உறுதி செய்யப்பட்டதையடுத்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றையதினம் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கொராணா தொற்றினாலேயே இவர் உயிரிழந்துள்ளார் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.