பெரும்தொகை திருடிய தங்க நகைகளுடன் சிக்கிய இளைஞன்!

38 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய சந்தேக நபரொருவர் கொழும்பு பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர் கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து 05 கிராம் 390 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் தங்க நகைகள் மற்றும் நீல நிற மாணிக்கக் கல் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.