பொலிஸாரை கண்டு குளத்தில் குதித்த இளைஞர் பலி!
பொலிஸாரை கண்டதும் பயத்தில் குளத்தில் குதித்த இளைஞன் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது இன்று காலை குருநாகல் குளக்கரையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த குளப்பகுதியில் ஓடிய சிறுவனை பார்த்ததும் சந்தேகமுற்ற பொலிஸார் விசாரணைக்காக அழைத்துள்ளனர்.
இதனால் பயந்த இளைஞர் தப்பிப்தற்காக குளத்தில் பாய்ந்ததையடுத்து பொலிஸார் இறங்கி தேடியுள்ளனர்.
இதயைடுத்து குளத்தில் குதித்த இளைஞரின் சடலம் உயிரிழந்த நிலையில் மிதந்து வந்துள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த இளைஞனை சோதனை செய்த போது இளைஞனின் கையில் போதைப்பொருள் போன்ற பக்கெட் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.