போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மகனை ஆற்றில் தள்ளிவிட்டு உயிரை துறக்க முயன்ற பெண் கைது
வத்தளை -ஹெந்தல – கதிரான பாலத்துக்கு அருகில் களனி ஆற்றில் தனது ஐந்து வயது மகனை தள்ளிவிட்டு, ஆற்றில் குதித்து உயிரை துறக்க முயன்ற பெண்ணொருவரை வத்தளை காவவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இப்பெண் நேற்று இரவு 7.30 அளவில் தனது மகனை தள்ளிவிட்டு, ஆற்றில் குதிக்க முற்பட்டபோது, வீதியால் பயணித்த நபரொருவர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளார்.
இதனையடுத்து, அவர் ஹெந்தலை காவலரணில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் வத்தளை காவல்துறையினரால் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதன்போது ஆற்றில் தள்ளிவிடப்பட்ட சிறுவனை கண்டுபிடிக்க படகுகள் மூலம் கடற்படையினர் மற்றும் காவல்துறையினர் தேடுதல் பணிகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.