மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களைக்கொண்டு சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானம்
இன்று முதல் அரசாங்க அலுவலகங்களில் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களைக்கொண்டு சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சுற்று நிருபம் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் கடந்தவாரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் 2 வாரங்களுக்கு இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.
குறைந்தளவான ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் போது, சுழற்சி முறை மற்றும் வேறு ஏதேனும் பொறிமுறைமையை பின்பற்ற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கட்டாய சேவைக்கு அழைக்கப்படுகின்ற நாட்களில் சேவைக்கு சமூகமளிக்காத ஊழியர்களது பணிநாள், தனிப்பட்ட விடுமுறையில் கழிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் , அனைத்து ஊழியர்களும் இணையவழியில் தொழிலாற்றுவதற்கு எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.