மதிய உணவு விடயம் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம்
நாளை மறுநாள் ஜூன் 02ம் திகதி நாடாளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத்தின் எதிர்கால விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசனை செய்வதற்காக இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளாா்.
குறித்த கலந்தாலோசனையின் போது முக்கியமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மதிய உணவு விடயம் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
மேலும், நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு எதிர்வரும் 07ம் திகதி செவ்வாய்க்கிழமை தொடக்கம் பத்தாம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.