நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு!
வாவியில் நீராடச் சென்ற 17 வயது மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது நேற்றையதினம் நெல்லிகல சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்ட வாவியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் யஹலதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் விஷ்வா (வயது 17) மற்றும் மொஹமட் அர்பாத் (வயது 17) என தெரியவந்துள்ளது.
மாணவர்கள் மூழ்கிய விடயம் குறித்து அப்பிரதேச நபர் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் தேடுதலில் ஈடுபட்டு குறித்த சிறுவர்களின் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக மருத்தவமனைக்கு அனுப்பியதைதொடரந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.