மின் தடை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் !
இலங்கையில் வரும், 2027 ஆம் ஆண்டு வரை பல்வேறுப்பட்ட சந்தர்ப்பங்களில் மின்துண்டிப்பை மேற்கொள்ள நேரிடும் என இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
மின்சார விநியோகத்திற்காக உரிய வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்படாவிட்டால் இந்த நிலைமை ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசாங்கம் மற்றும் சகல தரப்பினரும் ஒன்றிணைந்து இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என இலங்கை மின்சார பொறியிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.
பொறுப்பானவர்கள் அசமந்தம்
இரண்டாவது இயற்கை வாயு மின்னுற்பத்தி நிலையம் தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை விடயத்துக்கு பொறுப்பானவர்கள் இன்னும் சமர்பிக்காதுள்ளதாகவும் டவர் குறிப்பிட்டார்.
2026 மற்றும் 2027 ஆம் ஆண்டு காலப்பகுதிகளிலும் அடிக்கடி மின் துண்டிப்பை மேற்கொள்ள நேரிடும் என இலங்கை மின்சார பொறியிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.