மீண்டும் அதிகரிக்கும் முட்டையின் விலை!
இலங்கையில் கோழிக்கறி மற்றும் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த தொழிலை நடத்துவதற்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மாதந்தோறும் 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
சில வேளைகளில் முட்டையின் விலை 70 ரூபாய் அல்லது அதற்கு மேல் கூடும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் கூறுகிறது.