மீண்டும் கொரோனா!
இலங்கையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றின் பரவல் குறைந்திருந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதை அவதனிக்க முடிந்துள்ளது.
நாட்டில் நேற்றைய தினம் (20-07-2022) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 75 ஆக பதிவாகியுள்ளது.
இதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 664,572 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒற்றை இலக்கத்தில் காணப்பட்ட தொற்றாளர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 50க்கும் மேல் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.