நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
மீண்டும் மாற்றம் பெற்ற பெரிய வெங்காயத்தின் விலை
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரியை அறவிடுமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி உள்நாட்டு பெரிய வெங்காய செய்கையாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை குறைந்தது 250 ரூபாவாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
பெரிய வெங்காயத்தின் விலை உள்நாட்டு சந்தையில் சடுதியாக குறைவடைந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்த நிலைமை தொடரும் பட்சத்தில், உள்நாட்டு பெரிய வெங்காய செய்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.