போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் நடவடிக்கை
நாட்டின் தற்போதைய கோவிட்-19 வைரஸ் நிலைமையைக் கருத்தில் கொண்டு முகக்கவசங்களை அணிவது கடுமையாக பரிந்துரைக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தனவின் ஆலோசனையின் பேரில், பொதுமக்கள் வீட்டு வளாகங்கள், பொது இடங்கள் மற்றும் பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் போது முகக்கவசங்களை அணியுமாறு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேசமயம் இதனை சட்டமாக அமுல்படுத்தப்படாவிட்டாலும் அனைத்து மக்களும் முகக்கவசம் அணிவது அவசியமானது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கையில் கொரோனாதொற்று குறைவடைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.