முச்சக்கரவண்டிக்குள் கொலை செய்யப்பட்ட சடலம்…கொலையாளிகள் தொடர்பில் வெளிவந்த தகவல்!
கொழும்பு, வார்ட் பிளேஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட நபரின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்றையதினம் (23-07-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
119 பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணைகளின் போது மற்றுமொரு முச்சக்கரவண்டியில் வந்த இருவரே இக்கொலையை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.