நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
மொட்டு கட்சியின் ஊடக சந்திப்புகள் 2 வாரங்களுக்கு இரத்து; உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாளாந்த ஊடகவியலாளர் மாநாட்டை இரண்டு வாரங்களுக்கு நடத்தாதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைக்கு ராஜபக்ஷக்கள் உள்ளிட்ட அதிகார வர்க்கக் குழுவே காரணம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து அக்கட்சி பெரும் சிக்கலில் உள்ளது.
இதனால் ஊடகங்களின் கேள்விகளுக்கு முகங்கொடுக்க முடியாத நிலை கட்சிக்கு ஏற்பட்டுள்ளதால் மேற்படி தீர்மானத்தை அக்கட்சி எடுத்துள்ளது என்று தெரியவருகின்றது.
நிலைமை ஓரளவுக்கு அமைதியடையும் வரை கட்சித் தலைமையகத்தில் நடைபெறும் நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பை இரண்டு வார காலத்துக்குத் தற்காலிகமாக நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.