மொனராகலை மாவட்டத்தில் 45 கிராம சேவகர் பிரிவுகளில் கிராமசேவகர்களுக்கு தட்டுப்பாடு

மொனராகலை மாவட்டத்தில் 45 கிராம சேவகர் பிரிவுகளில் கிராமசேவகர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மொனராகலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சந்தன லொக்குஹேவாகே தெரிவித்தார்.
கிராமசேவர்களுக்கு தட்டுப்பாடு நிலவும் பிரிவுகளில் பணியாற்றுவதற்காக அருகிலுள்ள பிரிவுகளைச் சேர்ந்த கிராம சேவகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக 90 கிராமசேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் தங்களது சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மடுல்ல பிரதேச செயலாளர் பிரிவில் 8 கிராமசேவகர் பிரிவுகளுக்கும் சியம்பலாண்டுவ பிரதேச செயலாளர் பிரிவில் 7 கிராமசேவகர் பிரிவுகளுக்கும் மெதகம பிரதேச செயலாளர் பிரிவில் 6 கிராமசேவகர் பிரிவுகளுக்கும் படல்கும்புர பிரதேச செயலாளர் பிரிவில் 6 கிராமசேவகர் பிரிவுகளுக்கும் மொனராகலை பிரதேச செயலாளர் பிரிவில் 6 கிராமசேவகர் பிரிவுகளுக்கும் கிராம சேவகர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.
பிபிலை பிரதேச செயலாளர் பிரிவில் 5 கிராமசேவகர் பிரிவுகளுக்கும் வெல்லவாய பிரிவில் 3 கிராமசேவகர் பிரிவுகளுக்கும் தனமல்வில பிரிவில் 2 கிராமசேவகர் பிரிவுகளுக்கும் புத்தள பிரிவில் 2 கிராமசேவகர் பிரிவுகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.