யாழில் இ.போ.ச பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து!
யாழில் இ.போ.ச பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது நேற்று மதியம் யாழ்.சாவகச்சோியில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிவந்த இ.போ.ச பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதிவிபத்துக்குள்ளானது.
குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.