போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
யாழில் எரிபொருள் நிலையத்தில் மேற்கொள்ளப்படுகன்ற தொழில் முயற்சி!
நாட்டில் தற்போது பொருளாதார சிக்கலை கடந்து அனைவரும் எரிபொருள் சிக்கலில் சிக்கி தவிக்கின்றோம்.
இந்நிலையில் வாகனத்திற்கு எரிபொருள் பெருவது என்பது மிகுந்த சிரமத்திற்குள்ளான விடயமாக பார்க்கப்படுகிறது.
இதில் எரிபொருற் நிலையத்தில் நாள் கணக்காக காத்திருந்து எரிபொருள் பெற்றுவருவது மிகுந்த சிரமத்துக்குள்ளாக்கி வருவதும் இதனால் பல உயிரிழப்புகளும் நாட்டில் நிகழ்ந்து வருகின்றது.
எரிபொருளை நாளை பெற வேண்டுமென்றால் இன்று இரவு செட்டிற்கு போய் இரவு முழுவதும் சாப்பாடு இல்லாமல் நிக்கவேண்டும்.
இந்த துயரத்தினை போக்க யாழில் புதிய தொழில் முயற்சியை சிலர் துவங்கியுள்ளன.
அதாவது எரிபொருள் வரிசையில் முதல் நூறு எண்ணிக்கைக்குள் இடம் பிடித்துக் கொடுத்தால் 1000 ரூபா எனவும்.
நாள் முழுவதும் அந்த இடத்திலேயே தங்கி நின்று மோட்டார் சைக்கிளை பாதுகாத்து மறுநாள் காலை உரிமையாளரிடம் இடத்தையும் வாகனத்தையும் ஒப்படைத்தல் 1500 ரூபா கூலியாக வழங்கப்படுகிறது.
இந்த முயற்சி யாழில் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து அனைவரும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.