போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
யாழில் எரியூட்டப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் வீடு!
யாழ் காரைநகர் கிழக்கு பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் வீடுகள் மர்ம கும்பல் ஒன்றினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைய நாட்களாக கும்பல் ஒன்று காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பத்தில் ஈடுபட்டிருக்கின்றது.
குறித்த நபர்களால் உரிமையாளருக்கு வாள் காட்டி மிரட்டல் விடப்பட்டிருக்கின்றது.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸில் முறையிடப்பட்ட சம்பவத்தில் தொடர்புபட்ட நபர்களில் இருவரைக் கைது செய்திருந்தனர்.
அவர்களில் ஒருவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
இதன் தொடராக இன்று இரவு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் வீடுகள் மீது தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.