கொத்து ரொட்டி மற்றும் ஏனைய சிற்றுண்டி உணவுகளின் விலை குறைப்பு
யாழில் பரிதாபமாக உயிரிழந்த இரு பிள்ளைகளின் தந்தை!

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியான ஹெரோய்ன் போதைப் பாவனைக்கு அடிமையாகியிருந்த ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம், வரணி இயற்றாலையைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான வேலுப்பிள்ளை ராஜ்குமார் (வயது-37) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் போதைப் பொருள் குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டார்.
உயிரிழந்த குடும்பஸ்தர் கடந்த 10ஆம் திகதி வயிற்று வலி காரணமாக யாழ் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சிகிச்சை பயனின்றி இவர் நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்திருப்பதாக மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.
உயிரிழப்பு தொடர்பான விசாரணைகளை யாழ் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.
தொடர்ச்சியான ஹெரோய்ன் பாவனையே இவரது உயிரிழப்புக்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.