யாழில் பெட்ரோலையும் துவிச்சக்கரவண்டியையும் திருடிய மர்ம நபர்கள்!
நாட்டில் இடம்பெற்றுவரும் பொருளாதார சிக்கலில் பல்வேறு திருட்டுச்சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன அந்த வகையில் யாழில் இரவோடு இரவாக பெட்ரோலையும் துவிச்சக்கரவண்டியையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
இச்சம்பவமானது நேற்று இரவு கல்வியங்காடு புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து வீட்டு உரிமையாளர் பொலிஸாரிடம் முறைப்பாட்டினை செய்துள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.