யாழில் பெற்றோல் பெருவதற்காக வரிசையில் நின்ற திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!
யாழில் பெட்ரோல் பெருவதற்காக வரிசையில் காத்திருந்து QR குறியீட்டை காண்பித்த நபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது நேற்று மாலை 4.30 மணியளவில் யாழ்.கொக்குவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த சொரூபன் (வயது40) என்பவர் என விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இவர் கியூ அர் குறியீட்டை காண்பித்த அடுத்த நொடியே எரிபொருள் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த உயிரிழப்புக்கு திடீர் மாரடைப்பே காரணம் என கூறப்படுகிறது.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.