யாழில் பொறுப்பு வாய்ந்தவர்களின் பொறுப்பற்ற செயல்; வீசப்படும் மருத்துவ கழிவுகள் …மக்கள் விசனம்!
யாழ்ப்பாணம் – வேலணை பிரதேச மருத்துவமனை மற்றும் வேலணை பிரதேச சுகாதார மருத்துவர் பணிமனை அமைந்துள்ள வளாகத்திற்கு அருகிலுள்ள தனியார் காணியினுள் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பாவிக்கப்பட்ட ஊசிமருந்து குப்பிகள் மற்றும் மருந்து ஏற்ற பயன்படுத்திய ஊசிகள் இப்பகுதியில் கொண்டுவந்து கொட்டப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பாக பொதுமக்கள் வேலணை பிரதேசத்திலுள்ள அரச அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வேலணை பிரதேசசபை அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளும் நோில் சென்று பார்வையிட்டனர்.
வேலணை பிரதேச மருத்துவமனையின் வாளாகத்தினுள் பல லட்சம் ரூபாய் செலவில் மருத்துவக்கழிவுகள் தரம் பிரித்து பாதுகாப்பாக வைப்பதற்குரிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்களின் காணிகளுக்கு அருகில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக மக்கல் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாது விளையாட்டு மைதானங்கள், நீர் குட்டைகளிலும் இவ்வாறு மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பாக சுகாதார அதிகாரிகள் கவனதில் எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.