போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
யாழில் வீட்டை விட்டு ஆண் நண்பரை பார்க்க வந்த சிறுமிகளுக்கு நடந்த விபரீதம் !
புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து வீட்டை விட்டு வெளியேரிய இரு 17 வயது சிறுமிகளை சீரழித்த சம்பவம் தொடர்பில் கைதான 05 நபர்களையும் அச்சிறுமிகளையும் விளக்குமறியளில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவமானது கடந்த வாரம் இடம்பெற்ற நிலையில் நேற்றையதினம் இதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து சம்பவத்தினத்தன்று இரு 17 வயது சிறுமிகள் யாழ் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர்.
இதனையடுத்து தகலை அறிந்த ஆண் நண்பர் ஒருவர் அவர்களை ஒரு விடுதியில் தங்கவைத்துள்ளார்.
இந்நிலையில் ஆண் நண்பரின் தெரிந்தவர்களான இரு சாரதிகள் மற்றும் இரு நடத்துநர்கள் இரு சிறுமிகளையும் அடுத்த நாள் இரவு வாகனம் ஒன்றில் எழுதுமட்டுவாழ் பற்றைக் காட்டுக்குள் அழைத்துச்சென்றுள்ளனர்.
இதனால் அச்சிறுமிகளில் ஒருவர் சாதமாக பேசி பாதி வழியில் இறங்கி எழுதுமட்டுவாழ் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் பகுதிக்கு சென்று நடந்ததை விளக்கமாக கூறியுள்ளார்.
மற்ற சிறுமியுடன் சென்ற ஐவரும் மறுநாள் காலை சிறுமியை யாழ்ப்பாணம் நகருக்கு அழைத்து வந்து சிறுமியை இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.
தகவலறிந்த அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐவரையும் துர்நடத்தையில் ஈடுபட்ட இரு சிறுமிகளையும் விளக்குமறியளில் வைக்குமாறு நீதிமன்றில் இன்று உத்தரவிட்டுள்ளனர்.