நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
யாழ். எரிபொருள் நிலைய வரிசையில் மோதல்: அருகிலிருந்த புடவைக் கடை மீது தாக்குதல்!
யாழில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வரிசையில் இடம்பெற்ற மோதலில் அப்பகுதியில் உள்ள
புடவை விற்பனை நிலையமொன்று சேதமாக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவமானது யாழ்.குளப்பிட்டி பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் நேற்றையதனம் இடம்பெற்றுள்ளது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்தவர்களிடத்து வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் கைகலப்பாக மாறியுள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள புடவைக்கடை சேதமாக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த புடவைக்கடையின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது. இதனால் கடையின் உரிமையாளர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.