போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
யாழ்.காரைக்கால் குப்பை மேட்டில் தீ
யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான இணுவில் குப்பைக் கிடங்கில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இணுவில் காரைக்கால் குப்பைக் கிடங்கில் நேற்று திங்கட்கிழமை தீ பரவியது.
யாழ்.மாநகர சபை மற்றும் ஏனைய பகுதி பிரதேச சபையினரின் தீயணைப்பு படையினரின் நீண்ட நேர பிரயத்தனத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
குறித்த இடத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், இதற்கு முன்பும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் குப்பை மேட்டுக்கு விஷமிகள் யாராவது தீ வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தீ பரவியமைக்கான காரணம் உறுதியாக தெரியாத நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த குப்பைக் கிடங்கில் 2 ஆண்டுகளுக்கு முன்னரும் பாரிய தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த பகுதியில் குப்பை கிடங்கை அகற்றக்கோரி அப்பகுதி இளைஞர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.