யாழ் சுப்பர் மார்கெட்டில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்!
யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை இளைஞர் ஒருவர் இனம் தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
நேற்று மாலை 6:10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத மூவர், மானிப்பாய் நகரத்தில் அமைந்துள்ள ‘சுப்பர் மார்க்கட்’டில் பணிபுரியும் இளைஞர் மீதே தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்தில் ஜெயக்குமார் சஜீந்திரன் என்ற 21 வயதுடைய இளைஞனின் இடது கையை வெட்டிச் சென்றனர்.
வாள்வெட்டில் காயமடைந்த இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதேவேளை யாழில் அணமிக்காலமாக மீண்டும் வாள்வெட்டு சம்பவங்கள் தலைவிரித்தாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.