போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா ஆரம்பம்!
இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
இன்று ஆரம்பமான நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
ஓகஸ்ட் மாதம் 18ம் திகதி மஞ்சத் திருவிழாவும் ஓகஸ்ட் 31ம் திகதி சப்பரமும் செப்டம்பர் 1ம் திகதி தேர்த் திருவிழாவும் செப்டம்பர் 2ம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் மாலை கொடியிறக்கமும் நடைபெறவுள்ளன.
இந்த நிலையில் நல்லூர் கந்தனின் அருளைப்பெற புலம்பெயர் தேசங்களில் இருந்தும் பெருமளவு பக்தர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.