இலங்கையின் முக்கிய சுற்றுலா தலங்கள் தாக்கப்படலாம் ; அமெரிக்கா அவசர அறிவிப்பு
யாழ்.வல்லை பாலத்தில் இடம்பெற்ற விபத்து : ஒருவர் படுகாயம்!
யாழ். வல்லை பாலத்தில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது இன்று யாழ்.வல்லை பாலத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள பாலத்தில் மழையின் காரணமாக வழுக்கும் தன்மை அதிகம்காப்பட்டதால் கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் பலத்த காயங்களுககு இலக்காகி அருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.
அதே வேளை விபத்தினை ஏற்படுத்திய கார் பாலத்திரல் இருந்து விழுந்துள்ளது. காரில் இருந்த சாரதிக்கு அதிஷ்டவசமாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.