போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்த இலங்கை கிரிக்கெட் வீரர்
ரசிகர்களிடம் இருந்து பெற்ற ஆதரவிற்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாக இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆசியக் கிண்ணத்தை வென்றதன் பின்னர், இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை இலங்கை வந்துள்ள நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அணியில் உள்ள அனைவரும் போட்டியில் சிறப்பாக செயற்பட்டதாகவும் வெற்றிக்காக பெரும் சவால்களை எதிர்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து வீரர்களும் நல்ல மனநிலையில் இருப்பதாகவும், உலகக் கிண்ணத்திற்கு இதுபோல் தொடர்ந்து விளையாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.